மாஸ்க் அணியவது அவசியமில்லை…! அமெரிக்கா அறிவிப்பு….

0

அமெரிக்காவில் கொரோனா தொற்றானது பல உச்சத்தை எட்டியிருந்தது

தற்போது அதனை கட்டுப்படுத்துவதற்கு, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் பின் கொரோனா பரவல் குறைய, மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கூட்டமான இடங்களில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், தியேட்டர்கள் போன்ற உள் அரங்கு கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேர்ந்தால் கூட்டம் இல்லாவிட்டாலும் மாஸ்க் அணிய பரிந்துரைப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் இனி மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here