மாவைக் கந்தன் பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகிறது.

0

வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், கற்பூரக் கந்தன் எனப் போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றதுமான மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்தக் காம்யோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை(15-07-2021) காலை விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாகிறது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனாத் தொற்று அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்வருட காம்யோற்சவ நிகழ்வுகள் அடியவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட பங்களிப்புடனும், இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடனும் இடம்பெறும்.

உலகவாழ் மக்கள் அனைவரும் நோய் நொடிகள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ மாவைக் கந்தனைப் பிரார்த்தித்து இவ்வருடக் காம்யோற்சவம் 25 தினங்களும் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here