மால்டோவாவுக்கு சொந்தமான கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

0

உக்ரைனின் Odessa நகரில் உள்ள துறைமுகத்திற்கு அருகே மால்டோவாவுக்கு சொந்தமான Millenium Spirit என்ற இரசாயன டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை மால்டோவா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படை, மால்டோவா கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏவுகணை தாக்கியதை தொடர்ந்து கப்பல் தீ பிடித்து எரிந்த்தள்ளது.

குழுவினர் அனைவரும் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் கப்பலை விட்டு வெளியேறி உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கப்பலில் பயணித்த குழுவினர் அனைவரும் ரஷ்யர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான மால்டோவா நேட்டோ உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கருங்கடலில் துருக்கிய சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று மால்டோவா கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here