மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த டி.இமான்

0

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கைவசம் ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் 40-வது படம், விஜய் சேதுபதியின் லாபம், அரவிந்த் சாமியின் வணங்காமுடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், இசையமைப்பாளர் இமான், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு, தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார். இவருடன் இணைந்து சஹானா என்ற சிறுமியும் அப்பாடலை பாடி உள்ளார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில், இவர்களை பாட வைத்துள்ளதாக இமான் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பளித்த இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு தனது இசையில் வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட இமான், வாய்ப்பு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here