மார்கழி மாத பிரதோஷ விரதமும்… பலன்களும்….

0

மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள்ம மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதுவும் பிரதோஷம் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையன்று பிறப்பது இன்னும் விசேஷமானதாகும்.

அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்கி இல்லம் திரும்ப வேண்டும்.

“பொன்” எனப்படும் தங்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். எனவே மார்கழி மாதத்தில் வியாழக்கிழமையில் வரும் சிறப்பான இன்றைய பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவபார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வறுமை நிலை நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பிறருடனான பகை நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here