மாம்பழங்களை பரிசாக அனுப்பும் பாகிஸ்தான்! ஏற்க மறுக்கும் உலக நாடுகள்

0

பாகிஸ்தான் அரசு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரிசாக மாம்பழங்களை அனுப்பியுள்ளது.

குறித்த நாடுகள் அதனை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் அரசு அதன் ‘மாம்பழ ராஜதந்திர’ முன்னெடுப்பின் (Mango diplomacy) ஒரு பகுதியாக, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், கனடா, இலங்கை, எகிப்து உள்ளிட்ட 32 உலக நாடுகளின் தலைவர்களுக்கு கடந்த புதைக்கிழமை பெட்டி பெட்டியாக மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் ஆல்வி சார்பாக ‘சவுன்சா’ வகை மாம்பழங்கள் அனுப்பப்பட்டதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அவற்றின் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மேற்கோளிட்டு அந்த மாம்பழங்களை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.

கனடா, நேபாளம், எகிப்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளும் பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து வந்த அந்த பரிசை ஏற்க மறுத்துள்ளன.

இதனைத் தவிர்த்து ஈரான், வளைகுடா நாடுகள், துருக்கி, பிரித்தானியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ரஷ்யாவிற்கும் மாம்பழ பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பரிசை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here