உலகிலேயே முதன்முறையாக மான்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவலாம் என கனேடிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இதுவரை, மனிதர்களிடமிருந்து மான்களுக்கு கொரோனா தொற்று பரவுவது கண்டறிப்பட்டுள்ளது.
மேலும் மான்களிடமிருந்து மான்களுக்கு கொரோனா பரவுவதையும்தான் ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்கள்.
2021 ஆம் ஆண்டு, தென்மேற்கு ஒன்ராறியோவில் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மான்களை அறிவியலாளர்கள் குழு ஒன்று ஆராய்ந்தது.
அந்த ஆய்வில், அந்த மான்களில் கொரோனா வைரஸ் ஒன்று பரவியிருப்பதை கண்டறிந்தார்கள்.
அதே நேரத்தில், அதே பகுதியில் வாழும் ஒருவரிடம் அதே வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர் குறித்த மான்களைக் கையாண்டது தெரியவந்தது.
அந்த மான்களிடமிருந்து அவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
மான் வேட்டைக்குச் செல்வோர், தங்கள் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கையுறைகள், கண்களை பாதுகாக்கும் பெரிய கண்ணாடிகள் மற்றும் மாஸ்க் அணிந்து மான் இறைச்சியைக் கையாளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ்கள், சாதாரணமாக சமைக்கும் வெப்பநிலையிலேயே கொல்லப்பட்டுவிடும்.
அத்துடன், சமைத்தபின் அந்த உணவிலிருந்து கொரோனா பரவியதற்கான ஆதாரம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை