மாநாடு வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது… சூப்பர் ஸ்டார் மோகன்லால் பாராட்டு!

0

மாநாடு படத்தின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது. ரிலிஸ் ஆனதில் இருந்து ஐந்து நாட்களாக வசூல் குறையாமல் இருப்பதே இந்த படத்தின் வெற்றியின் சாட்சி.

தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களிலும் இந்த படத்தின் வெற்றி கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘மாநாடு படத்தின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ எனக் கூறியுள்ளார். அந்த வீடியோவை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here