மாநாடு படக்குழுவை பாராட்டிய இயக்குநர் சங்கர்.!

0

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த படம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாநாடு படத்தை இயக்குநர் சங்கர் மாநாடு படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், மாநாடு படத்தை மிகவும் புத்திசாலித்தமான முறையில் எழுதி இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சிலம்பரசன் கலக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக நடித்துள்ளார். யுவனின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிரது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். டைம் லூப் கதைக்களம் அருமையாக கைகொடுத்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதிய மற்றும் பொழுதுபோக்கான ஒரு அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here