மாத்தளையில் 5 வயது மாணவனை கடித்துக்குதறிய தெரு நாய்கள்!

0

மாத்தளையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை தெரு நாய்கள் கடித்துக்குதறியுள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனே இதில் பாதிக்கப்பட்டுள்ளான்.

நாய்களின் கடிக்கு இலக்கான சிறுவனை விளையாட்டு மைதானத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் தீவிர முயற்சிக்குப் பின் மீட்கப்பட்டுள்ளான்.

இந்தச் சம்பவத்தின்போது ஒரு நாய் உயிரிழந்துள்ளது. காயமடைந்த சிறுவன் மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here