ஐசிசி Player of the Month எனும் ஒரு மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு மே மாதத்திற்கான சிறந்த வீரரை ஐசிசி அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மே 2022க்கான ஐசிசியின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் மிரட்டலான ஆட்டத்தை மேத்யூஸ் வெளிப்படுத்தினார்.
அந்த அணிக்கு எதிராக 199 மற்றும் 145 ஓட்டங்களை அவர் விளாசியிருந்தார்.
இந்நிலையில், ஐசிசியின் இந்த விருதை பெறும் முதல் இலங்கை வீரர் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் படைத்துள்ளார்.
