மாணவனை திருமணம் செய்த பேராசிரியைக்கு நேர்ந்த கதி!

0
indian bride and groom holding hand at wedding day.

வங்கதேசத்தில் மாணவனை கல்லூரி பேராசிரியை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் குறித்த பேராசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கைருன் நாஹர் (40) என்ற பெண் கல்லூரி பேராசிரியையாக இருந்தார்.

மமும் ஹுசைன் (22) என்ற வாலிபர் கல்லூரியில் படித்து வந்தார்.

இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

அந்த சமயத்தில் இவர்களின் திருமணத்தை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில் நேற்று கைரூன் தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஹுசனை கைது செய்துள்ளனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், அதிகாலை 4 மணியளவில் நான் படுக்கையில் இருந்து எழுந்து கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது என் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

இது கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here