மாட்டு சாணம், கோமியம் மூலம் சிகிச்சை பெறும் மக்கள்…. மருத்துவர்கள் எச்சரிக்கை…

0

இந்திய மாநிலம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில், கொரோனாவை தடுக்கும் மருந்தாக மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாரத்திற்கு ஒரு முறை, மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்டு சிகிச்சை பெறுவதால் உடலில் கொரோனா தொற்றுக்கு எதிரான சக்தி உருவாகும் என நம்பப்படுகிறது.

இதனிடையே மாட்டுச் சாணத்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

மேலும் மாட்டு சாணம் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனை கொண்டிருக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது முழுக்க முழுக்க நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் இந்த தயாரிப்புகளை உடலில் பூசிக்கொள்வதிலோ அல்லது உட்கொள்வதிலோ உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பிற நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ. ஜெயலால் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை, தடுப்பூசிகளின் மூலமே கட்டுப்படுத்த முடியும்.

இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here