மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா….?

0

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படும் சந்ர்ப்பத்தில் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்ககூடிய சந்தர்ப்பம் உள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நாட்டின் 14 மாவட்டங்களில் 6 காவல்துறை பிரிவுகளும், 98 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருகோணமலை பிரதேச செயலாளருக்கும், மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, திருகோணமலை மாவட்ட செயலாளரும் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here