நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அதற்கமைய, 31 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.