மாகாணங்களுக்கிடையில் நடைமுறையிலிருக்கும் பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ம் திகதிவரை நீடிக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
மேலும், ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை தினங்களாக உள்ளது.
ஆகையால், குறித்த தினங்களில் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.