மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு

0

நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் நிலைமை அதிகரித்து வந்ததன் காரணமாக மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதேவேளை, தற்போதைய நடமாட்டக்கட்டுப்பாடு தளர்வுகள் நாளை (05) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.

எனவே, 19 ஆம் திகதியின் பின்னர் மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here