மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுகிறதா?

0

தற்போது அமுலிலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் பொதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் டெல்டா தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுகிறது.

இதுவரை 5 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொற்று மேலும் பரவலடைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை (04) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக இதுவரை எந்தவித இறுதித் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here