மஹிந்தவின் பதவியை பறித்த பசில்

0

தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதற்கமைய நிதி அமைச்சராக அவர் பதவி ஏற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜப்ஷ ராஜபக்ஷவுக்கு முன்னிலையில் பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச நியமனமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நிதி அமைச்சு பதவி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here