மஹா சிவராத்திரி விரத சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

0

இலங்கையில் மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்து சமய மற்றும் கலாசார திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 11 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

சிவராத்திரி விரத நிகழ்வுகளை இந்து ஆலயங்களில் சிறப்புற நடத்த ஊக்கம் நல்குமாறும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மஹா சிவராத்திரி விரதத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களூடாக, தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here