மஸ்கெலியாவில் பாரிய தீ விபத்து…! 20 வீடுகள் சேதம்!

0

இலங்கையில் மஸ்கெலியா- பிரவுன்ஸ்விக் தோட்டத்தின் ராணி பிரிவில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நெடுங்குடியிருப்பு ஒன்றின் 20 வீடுகள் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், அந்த தீப்பரவல் காரணமாக சுமார் 60 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here