மழைநீர் வடிகுழாய்க்குள் நிர்வாணமாக மீட்க்கப்பட்ட பெண்…!

0

ப்ளோரிடாவில் மழைநீர் வடிகுழாய்க்குள் செவ்வாய்க் கிழமை சாலையோரமாக அமைந்திருந்த மழைநீர் வடிகுழாயிலிருந்து யாரோ உதவி கோரி சத்தமிடுவதை கவனித்த வழிப்போக்கர் ஒருவர், பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

தீயணைப்பு வீரர்களுடன் விரைந்துவந்த பொலிசார், அந்த மழைநீர் வடிகுழாய்க்குள் பெண் ஒருவர் சிக்கியிருந்ததைக் கண்டு, அவரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

வெகு நேர போராட்டத்திற்குப் பின், நிர்வாண நிலையிலிருந்த ஒரு பெண்ணை மீட்டனர்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் கூறுகையில்,

அந்த பெண்ணின் பெயர் Lyndsey Kennedy 43 வயது மார்ச் 3 ஆம் திகதி கால்வாய் ஒன்றில் நீந்தச் சென்ற Lyndsey, கால்வாய்க்குள் ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பைக் கண்டு அதைப் பார்க்கச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்து திரும்ப வர அவருக்கு வழி தெரியவில்லை.

அந்த சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடை ஒன்றிற்குள் சென்ற Lyndsey, அங்கு சுமார் 20 நாட்கள் செலவிட்டுள்ளார்.

கடைசியாக, மழைநீர் வடிகுழாய் ஒன்றிலிருந்து வெளிச்சம் வருவதைக் கண்ட Lyndsey, அங்கிருந்து சத்தமிட்டால் யாருக்காவது கேட்கலாம் என்று எண்ணி, அந்த மழைநீர் வடிகுழாய்க்குள் சென்று அமர்ந்திருக்கிறார்.

பொதுவாக மழைநீர் வடிகுழாய்க்குள்ளிருந்து பூனை, நாய் போன்ற விலங்குகளைத்தான் மீட்டதுண்டு என்று கூறும் தீயணைப்பு வீரர்கள், Lyndsey அந்த அபாயகராமான சூழலில் எப்படி 20 நாட்கள் செலவிட்டார் என ஆச்சரியப்படுகிறார்கள்.

Lyndseyக்கு சிறிது மன நல பிரச்சினையும் உள்ளது என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here