மற்றொரு புதிய வகை கொரோனா…. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

0

கொரோனா வைரஸானது தற்போது உருமாற்றமடைந்து பல நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் இந்த புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் 29 நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றை வேரியன்ட் ஆப் இன்ட்ரஸ்ட் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

முதன்முதலாகப் பெரு நாட்டில் இந்தவகை கொரோனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டுள்ளது.

தற்போது அது லத்தீன் அமெரிக்கா, அர்ஜண்டினா, சிலி உள்ளிட்ட 29 நாடுகளுக்குப் பரவியுள்ளது.

இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வகை கொரோனாவை கையாள்வதில் பல்வேறு நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் மற்றொரு புதிய வகை கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது.

அந்த வைரசின் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here