மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 75-வது பிறந்த தினம்

0

இந்தியாவின் பிரபல திரையிசை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தநாளான இன்று அவர் குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களுக்கு பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடல்கள் பாடுவதோடு மட்டுமல்லாமல் சில படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து தன் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தியவர்.

கடந்த ஆண்டு உடல்நல குறைவால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினரை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று அவர் மறைந்த பிறகான அவரது முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரை நினைவு கூர்ந்துள்ள ரசிகர்கள் அவர்தம் பாடல்கள் வழி அவர் தங்களுடன் வாழ்வதாக சமூக வலைதளங்களில் அவர் குறித்த ஹேஷ்டேகுகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here