இந்தியாவில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை கே. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், மர்மமான முறையில் மயில்கள் இறந்த கிடந்துள்ளது.
தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையில் 7 மயில்கள் இறந்து கிடந்ததை கண்டு அதனை சோதனை செய்தனர்.
அப்போது 7 மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனால் வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றது தொடர்பில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.