மர்மமான முறையில் கொல்லப்பட்ட நடிகை…! தீவிர விசாரணையில் பொலிஸார்

0

துருக்கியில் இஸ்தான்புல்லில் வசித்துவரும் Sukriye Bulgurcu (28), வளர்ந்துவரும் ஒரு நடிகை ஆவார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்ற அவரது நண்பர்கள், Sukriye பதிலளிக்காததால் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டுக்குள் Sukriye உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில் Sukriye உயிரிழந்து கிடந்ததால், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் கருதுகிறார்கள்.

பொலிசாரும், அவரது மரணத்தை சந்தேகத்துக்குரியதாக கருதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Sukriye எப்படி உயிரிழந்தார் என்பதை அறிவதற்காக, அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here