மர்மமாக காணாமல் போன 2 வயது குழந்தை கண்டுபிடிப்பு

0

இலங்கையில் நீர்கொழும்பு – தலாஹேன பகுதியில் 2 வயதான குழந்தை கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக அவரது தாயார் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த குழந்தை தமது பொறுப்பில் உள்ளதாக அவரது தந்தை, 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவித்ததாக அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.

அதனால் குறித்த குழந்தை தனது தந்தையுடன் பாதுகாப்பாக உள்ளதா என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here