மருமகளுக்கு கொரோனாவை பரப்ப மாமியாரின் திட்டம்…!

0

இந்தியாவில் தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டம், நெமிலி குட்டா தண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த லொரி ஓட்டுனருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது.

திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இதனிடையே அப்பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மாமியாருக்கு கொரோனா என்பதால் ஒரே வீட்டில் வசித்தாலும் அவரிடம் இருந்து சமூக விலகலை கடைப்பிடித்து மருமகள் விலகியே இருந்து வந்திருக்கிறார்.

இதனை பிடிக்காத மாமியார் தன் மருமகளுக்கும் கொரோனா வைரஸை பரப்பவேண்டுமென தன்னுடைய மருமகளை அவ்வப்போது கட்டிப்பிடித்து பரிவுடன் இருப்பது போல் நடித்து வந்திருக்கிறார்.

மேலும் அவருடைய பேரக்குழந்தையையும் அவர் கட்டிப்பிடித்துள்ளார்.

இதன் காரணமாக மருமகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.

இதனையே காரணம் காட்டி மருமகளையும் அவர் வீட்டிலிருந்து துரத்தியிருக்கிறார்.

அவர், வேறு வழியில்லாமல் தன்னுடைய சகோதரி வீட்டுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறார்.

வீட்டிற்கு வந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாமியாரின் பயோ வோர் அட்டாக் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த 7 மாதங்களாக ஒடிசாவில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வருவதால் அவராலும் தன்னுடைய மனைவிக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here