மருத்துவரை மிரட்டி திருமணம் செய்த பெண்…

0

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவராக உள்ளவர் சத்யம் குமார்.

ஹஸன்பூர் கிராமத்தில் உள்ள விஜய் சிங் என்பவர் இவரை, தங்கள் வீட்டு பிராணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனே வந்து சிகிச்சை அளிக்குமாறும் அழைத்துள்ளார்.

அதனை நம்பி சத்யம் குமாரும் அங்கு சென்றுள்ளார்.

அப்போது மூன்று பேர் அவரை கடத்தி சென்று இளம்பெண் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பெண்ணின் உறவினர்கள் பலர் அவர் சூழ்ந்து கொண்டு மிரட்டி, திருமணம் செய்ய கூறி வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் செய்வதறியாது விழித்த சத்யம் குமார், வேண்டா வெறுப்பாக அழுதுகொண்டே திருமண சடங்குகளை செய்தார்.

பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இதுகுறித்து அறிந்த மருத்துவரின் தந்தை பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மணப்பெண்ணின் உறவினர்களை நேரில் அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here