மருத்துவமனை கட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

0

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி.

இவரது மனைவியான 55 வயதாகும் சாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 20ஆம் திகதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 21ஆம் திகதி மாலை கட்டிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது.

அவரது தலை, முகம், வாயில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை பொலிசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here