மருத்துவமனைகளில் நிரம்பி காணப்படும் பிரித்தானிய சிறார்கள்…! மருத்துவர்கள் எச்சரிக்கை

0

பிரித்தானியாவில் Omicron தொற்றால் மருத்துவமனையை நாடும் சிறார்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகின்றது.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு Omicron தொற்றால் கடுமையான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முன்னணி குழந்தைகள் நல மருத்துவர்கள் இதை உறுதிப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

டிசம்பர் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 12 ஆம் திகதி வரையிலான மருத்துவமனை தரவுகளிள், அனுமதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட கொரோனா நோயாளிகளில் 42% ஒரு வயதுக்குட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இது கொரோனா பரவல் கண்டறியப்பட்டு கடந்த டிசம்பர் வரையான காலகட்டத்தில் 31% அதிகரிப்பு என கூறப்படுகிறது.

இருப்பினும், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்களில் வெகு சிலருக்கே தீவிர சிகிச்சை அல்லது செயற்கையாக ஆக்ஸிஜன் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், NHS மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 12 ஆம் திகதி வரை 18 வயதுக்குட்பட்ட 405 பேர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 171 பேர் 1 வயதுக்குட்பட்டவர்கள், 78 பேர் 1-4 வயதுடையவர்கள், 78 பேர் 5-11 வயதுடையவர்கள் மற்றும் 78 பேர் 12-17 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here