மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை…. அபாய நிலையில் இலங்கை

0

இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கை மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகின்றது.

நாட்டின் கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ள இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்க முடியுமான நோயாளர் தொகை உச்சத்தை எட்டியுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரே தடவையில் அதிகமான நோயாளர்களை மருத்துவமனைகளில் வைத்து, சிகிச்சையளிக்கும் வசதிகள் குறைந்தே காணப்படுகின்றது.

மேலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் குறைவாக காணப்படுகின்றன என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் தெரியவரும் வரை சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான 16 ஆயிரத்து 720 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here