மரியுபோல் நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்!

0
A woman with two children and carrying bags walk on a street to leave Ukraine after crossing the Slovak-Ukrainian border in Ubla, eastern Slovakia, close to the Ukrainian city of Welykyj Beresnyj, on February 25, 2022, following Russia's invasion of the Ukraine. - Ukrainian citizens have started to flee the conflict in their country one day after Russia launched a military attack on neighbouring Ukraine. (Photo by PETER LAZAR / AFP)

ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் மரியுபோல் நகரின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், எஞ்சியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நகரை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியையும், ரஷ்ய ஆதரவு போராளி குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியையும் மரியுபோல் நகரம் இணைப்பதால் அதனை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

போர் தொடங்கி ஒன்றரை மாதத்துக்கு மேலாக ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால், திரும்பிய பக்கமெல்லாம் சிதைந்த கட்டிடங்களும், இறந்தவர்களின் சடலங்களும் காணப்படுகின்றன.

அதேவேளை மரியுபோலில் மட்டும் உக்ரைன் ராணுவத்தினர் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here