மன அழுத்தத்தை குறைக்க சில எளிய வழிமுறைகள்…!!

0

டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும்.

எனவே டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

மன அழுத்தமாக அல்லது டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள். இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.

அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.

மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம்.

முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம்.

டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம். நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவதும் அவசியம். முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.

எந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம். சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here