மன்னிக்கப்படுவாரா இம்ரான் கான்?

0

பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகக் கூறியதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

‘நீதிமன்றம் விரும்பினால், நான் பெண் நீதிபதியிடம் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்பேன். நீதிமன்றம் அல்லது நீதித்துறையின் உணர்வுகளைப் புண்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் கூறமாட்டேன்“ என்று கான் இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

‘எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டேன்’ என்று நான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்கிறேன்’ என்று அவர் கூறினார். ‘நான் ஒரு சிவப்பு கோட்டைத் தாண்டியிருந்தால் மன்னிக்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.

ஆகஸ்ட் 20 அன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு பொது பேரணியில் உரையாற்றதைத் தொடர்ந்து கான் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

தனது உயர் உதவியாளர் ஷாபாஸ் கில்லைக் கைது செய்ததற்காக நீதிபதி ஜெபா சவுத்ரியின் நடவடிக்கையை கான் கண்டித்திருந்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், பாகிஸ்தானின் சட்டங்களின்படி, இம்ரான் கான் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பொதுப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

கான் மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து,அவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

அத்துடன் அக்டோபர் 3 ஆம் திகதியன்று இடம்பெறும் அடுத்த விசாரணைக்கு முன் தனது சத்திய கடதாசியை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டது.

இம்ரான் கானின் அரசாங்கம் இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அகற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here