மன்னார் திருக்கேதீஸ்வர சிவராத்திரி திருவிழா- இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் பக்தி பூர்வமாக நடை பெற்று வருகிறது!

0

நாயன் மார்களால் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களின் முதன்மையானதாக கருதப்படும் மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (1) காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

3 தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் மாத்திரமே பாலாவியில் தீர்த்தம் எடுத்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ராணுவம் ,போலீஸ், சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள்.

மன்னார் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்துதலிலும் மன்னார் மாவட்ட செயலாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரின் மேற்பார்வையில் வெளி நிர்வாக ஒழுங்குகள் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.

பக்திபூர்வமாக பூஜைகள் நடைபெற்று வருவதுடன் பக்தர்களும் மிக அமைதியாக தீர்த்தம் எடுத்து வந்து மூல லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே திருக்கேதீஸ்வரத்தில் வலுவூட்டல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்களின் வருகை குறைவாக காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here