மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்ற பேருந்து காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த பேருந்தில் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் யுவதிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
மடு ரோட் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நாய் ஒன்று குறுக்கிட்ட நிலையில் பேருந்து பள்ளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது.
பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.