இந்தியாவில் புதுச்சேரியில் குடும்பத் தகராறில்,
இந்தியாவில் வில்லியனூரைச் சேர்ந்த கணேசும் – மீனாவும் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டவர்கள்.
மதுபோதையில் கணேஷ் அடிக்கடி மீனாவிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், போதையில் இருந்த கணேஷ் சின்ன வாய்க்கால் வீதியில் மீனா பணியாற்றி வரும் பார்லருக்கு சென்று, அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு தப்பிச் சென்றார்.
தீக்காயமடைந்த மீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிசார், வழக்குப்பதிவு செய்தனர்.
பார்லருக்குள் புகுந்து மனைவி மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கணவனை, சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் கைது செய்தனர்.