மனைவி மற்றும் மாமியாரின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

0

இலங்கையில் குருவிட்ட கந்தலந்த பிரதேசத்தில் மனைவி மற்றும் மாமியாரின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணமாகியுள்ளார்.

சம்பவத்தின்போது 35 வயதான குறித்த நபரை அசிட் வீசியும் பொல்லால் அடித்தும் கொலை செய்துள்ளனர்.

தாக்குதலின்போது படுகாயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மனைவி, மாமி குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர் குடிக்கு அடிமையாகி மனைவியை அடித்துத் துன்புறுத்துபவர்.

அதனால் இவருக்கு எதிராக மனைவியால் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினம் குடும்பஸ்தர் குடித்துவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டபோது, தற்பாதுகாப்புக்காக இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்றும் அவரது மனைவியும் மாமியாரும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here