மனைவி மற்றும் மகளை கொடூரமாக கொலை செய்த பிரான்ஸ் தந்தை…!

0

பிரான்ஸின் மார்சே பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பாரிய ஆயுதத்துடன் வீட்டிற்கு வந்த தந்தை மனைவி மற்றும் பிள்ளைகளை பணயக்கைதிகளால் வைத்திருந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அயலவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய, பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் அவசரமாக அந்த வீட்டிற்கு சென்று சோதனையிட்டுள்ளனர்.

அங்கு கதவை திறந்தவுடன் பதின்ம வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கீழே கிடந்துள்ளார்.

அதன் பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

காயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டில் இரண்டு சிறுவர்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நிலையில் அவர்கள் காணப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சந்தேக நபரின் 70 வயதான தாய் மற்றும் 37 வயதான மனைவி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் சந்தேக நபரின் 15 வயதுடைய மகள் எனவும் ஏனைய இரண்டு சிறுவர்களும் அவருடைய பிள்ளைகள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் சம்பவத்தின் பின்னர் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டுள்ளார்.

எனினும் அவருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here