மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன் – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

0

கொழும்பில் தனது மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டவரான பெண்ணை இலங்கைக்கு அழைத்துவந்து, அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சந்தேகநபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் 31 வயதான ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சநகேதநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி சில மாதங்களுக்கு முன்பாக 36 வயதான குறித்த பெண்ணை, இலங்கைக்கு அழைத்துவந்து, சந்தேகநபர் அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான இலங்கையரின், மனைவியான உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள்தாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here