மனைவியை கொன்ற இளைஞரை பழிதீர்த்த கணவர்…. ஒரே குடும்பத்தில் அரங்கேறிய சம்பவம்

0

இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்பால் முண்டா(24).

இவர் குடும்பத்தில் உள்ள உறவினர்களுக்கு கடந்த சில தினங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததுள்ளது.

இதற்கு, அதே கிராமத்தில், வசித்து வரும் 55 வயது மதிக்கத்தக்க அத்தை பின்சாரி தேவி ஏதோ சூனியம் வைத்துவிடார் நம்பியுள்ளனர்.

அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி, அத்தையின் கணவர் மாக்தேவ் முண்டா அவரது பண்ணைக்கு சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வீட்டில் தனியாக இருந்த பின்சாரி தேவியை பார்த்து நீ ஒரு சூனியக்காரி எனக் கூறீ அவரை கோடாரியால் தாக்கி, துடி துடிக்க கொலை செய்துள்ளார்.

இதையடுத்து மனைவி கொல்லப்பட்ட தகவல் கிராம மக்கள் மூலம் மாக்தேவ் முண்டாவுக்கு தெரியவந்தது.

வீட்டிற்கு வந்த மனைவி கொல்லப்பட்டது தெரிந்து ஆத்திரமடைந்த நிலையில் ராஜ்பாலை வீட்டிற்கு அழைத்த மாக்தேவ் ஏன் கொலை செய்தாய் என்று கேட்டுள்ளார்.

அவள் ஒரு சூனியக்காரி. அவளால் தான் என் குடும்பம் இப்படி ஆனது. அதனால்தான் கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.

இதனால், மேலும் ஆத்திரமடைந்தவர் ஒரு நிமிட மவுனத்துக்கு பிறகு வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ராஜ்பாலை தலையில் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த இரண்டு சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here