மனைவியை உயிருடன் மண்ணில் புதைத்த கணவனின் கொடூரச் செயல்

0

இந்தியாவில் தமிழகத்தின் வேலூரின் கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் என்கிற விநாயகம் (வயது 24), கூலித்தொழிலாளி.

இவருக்கு குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சுப்ரஜா(வயது 24) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

இதுகுறித்து இருவரின் வீட்டாருக்கும் தெரியவர, வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த சுப்ரஜா, காதல் திருமணம் செய்து கொண்டார்,

இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்ரஜா மாயமாகி விட்டதாக விநாயகம், அவர்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் கேவி குப்பம் பொலிசில் புகார் அளித்தனர்,

பொலிசாரின் விசாரணையில் விநாயகம், அவரது தம்பி விஜய், 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சுப்ரஜாவை உயிருடன் புதைத்து கொன்றது தெரியவந்தது.

மேலும் மூவரையும் கைது செய்த பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

நானும், சுப்ரஜாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம்,

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக திருமணமான பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது தகாத உறவாக மாற சுப்ரஜா என்னை கண்டித்தார், இதனால் கோபமடைந்த நான் அவளை அடித்தேன்.

இதில் சுப்ரஜாவின் உடல்நிலை பாதிப்படைந்தது.

அவள் இல்லாமல் இருந்தால் தான் நான் சந்தோஷமாக வாழ முடியும் என நினைத்தேன்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தம்பி விஜய் மற்றும் உறவினர் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் சவக்குழி தோண்டினோம்.

அதற்கு மறுநாள் எனக்கும் சுப்ரஜாவுக்கும் தகராறின் போது கைகளால் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.

அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதாக கூறி சர்க்கார் தோப்பு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.

அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி விஜய் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் தயாராக இருந்தனர்.

3 பேரும் சேர்ந்து சுப்ரஜாவை தாக்கினோம் அவர் மயங்கி விழுந்தார்.

ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவரை உயிருடன் புதைத்துக் கொன்றோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here