மனைவியின் பழிவாங்கும் செயலால் கணவருக்கு நேர்ந்த கதி

0

கணவனை பழிவாங்குவதற்காக, மனைவி அவருடைய ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 29 வயது இளம் பெண், 30 வயது மதிக்கத்தக்க நபரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

கணவன் மீது கடும் கோபத்தில் இருந்த அப்பெண், அவரை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார்.

அதன் படி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவரின் பெயரில் பல அக்கவுண்ட்களை ஓபன் செய்துள்ளார்.

அதன் பின், அதில் கணவனின் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

திருமணம் ஆன புதிதில், கணவனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவர் மட்டும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவன் உடனடியாக இது குறித்து சைபர் கிரைம் பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவரைக் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here