மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய கொடூரன்..

0

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் Kahror Pakka tehsil-வில் உள்ள Cheela Wahan பகுதியில் வசித்து வருபவர் Muhammad Sharif.

இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, Ishrat என்பவரை திருமணம் செய்துள்ளார்.

Muhammad Sharif அங்கிருக்கும் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்த தம்பதியின் மகள் Halima Sadia, கடையில் தந்தையின் அனுமதியின்றி பணத்தை எடுத்துள்ளார்.

ஏதோ பொருள் வாங்குவதற்காக அவர் பணத்தை எடுத்துள்ளார்.

ஆனால் இது குறித்து Muhammad Sharif-விடம் தெரிவிக்காததால், இது குறித்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது மனைவியான Ishrat-க்கும் இவருக்கும் கடந்த 14-ஆம் திகதி வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதனால் அவர் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை அப்புறப்படுத்த முடியாத காரணத்தினால், கோடாரியால் வெட்டி, உடல் பாகங்களை தீயிட்டு அதன் பின் அங்கிருக்கும் கால்வாயில் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது தன்னுடைய மூன்று குழந்தைகளையும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தன்னுடைய தாயின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் Ishrat-ன் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், உடனடியாக Ishrat-ன் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்பு பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here