மனைவியின் அவசர முடிவால் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…

0

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தின் மஜ்ரா தேரா கிராமத்தை சேர்ந்த ஹரிம் நாயக் என்பவருக்கும் ஆர்த்தி (25) என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தம்பதிக்கு சிவா என்ற எட்டு மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலையில் ஆர்த்தி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

ஆனால் இந்த தகவலை இரவு முழுவதும் அவர் கணவர் குடும்பத்தார் மறைத்தனர்.

அக்கம்பக்கத்தினருக்கு இந்த தகவல் கசிந்த நிலையில் ஆர்த்தி குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ஹரீம் வீட்டுக்கு வந்தனர். அப்போது தான் ஹரீம் வெளியூருக்கு சென்றிருந்தது தெரியவந்தது.

மேலும் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் மாமனார், மாமியார் ஆர்த்தி குடும்பத்தாரிடம் கூறினார்கள்.

இது குறித்து ஆர்த்தி சகோதரர் தீபக் கூறுகையில், ஆர்த்தி உடலின் முதுகில் காயங்கள் உள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

அவரை அடித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

தற்போது ஆர்த்தியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பியுள்ள நிலையில் அதன் முடிவில் ஆர்த்தியின் மரணத்துக்கான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here