மனித உடலில் இருந்து எடுத்த இரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பதை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் ஆய்வு செய்த இரத்த மாதிரிகளில் கிட்டத்தட்ட 50 சதவீத மாதிரிகளில் குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும் பெட் போத்தல்களின் நுண்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட 22 இரத்த மாதிரிகளில் சமார் 80 சதவீத மாதிரிகளில் ஏதோ ஒரு வகையானபிளாஸ்டிக் கழிவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுகள் காற்று,குடிநீர்,உணவு மூலம் புகுந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டூத் பேஸ்ட், லிப் கிளாஸ், டேட்டூ மை உள்ளிட்ட பொருட்கள் மூலம் இரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.