மனிதன் வெளியேற்றும் வாயு மூலம் பரவும் கொரோனா ஆய்வு தகவல்….

0

அவுஸ்திரேலியாவில் ஒரே கழிவறையை பயன்படுத்திய இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளது.

விஞ்ஞான ரீதியாக இது உறுதிப்படுத்தப்படவில்லை.

பெரும்பாலும் கொரோனா வைரஸ் வாய் மற்றும் மூக்கு வழியாக பரவுவதாகக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் கொரோனா வைரஸ் மலம் சார்ந்த கழிவுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மற்றும் தொற்றுகள் கழிவுநீரில் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால், கொரோனா வைரஸ் வாயு மூலம் பரவுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.

ஏனெனில் உள்ளாடைகள் மற்றும் உடைகள் முகக் கவசம் போலவே தடையாக செயல்படக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின் நம்பகமான ஆராய்ச்சியை பரீசிலிப்பதாக பிரித்தானியா அமைச்சர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here