மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம்… மருத்துவர்களின் புதிய சாதனை

0

அமெரிக்காவில் டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர்.

இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன.

எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் நிலை ஏற்படலாம்.

உலகெங்கிலும் உடலுறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் பல்வேறு மக்களுக்கு இது மகிழ்ச்சியான தகவல் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here