மத்திய கிழக்கு நாட்டில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

0

மத்திய கிழக்கு நாட்டிற்கு பணிக்கு சென்ற இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் நிலைமை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

சவூதி அரேபியாவின் தியாட் நகரில் உள்ள ஒரு வீட்டில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் கடுமையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளையைச் சேர்ந்த பாதிக்கப்பட்டப் பெண், குருணாகலில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் ஒன்றினூடாக 2017ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர், நீண்டகாலமாக வீட்டு உரிமையாளர்களால் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் இருந்து அந்த பெண் இரகசியமான முறையில் செய்த முறைப்பாட்டிற்கமைய அவரை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here